Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி மூன்று



விதிக்கப் பட்ட சக்தி அதிகப்பட்ட சக்தி
*********************************************************
மனிதன் தன் எதிரில் மரணம் ஒன்று எதிர் கொண்டு இருப்பதை ஒரு நொடி கூட உணராமல் பல் வேறு உலகியல் ஆற்றலுக்கு தன் ஆற்றலை பலி ஆடு ஆக்கி மரணத்தை விரைவு ஆக்கி கொள்கிறான்.. எந்த யோகப் பயிற்சிகளும் தன் உலகியல் ஆற்றலை அதிகப் படுத்தவதற்காகவே நூற்றுக்கு நூறு மனிதர்கள் கற்க விரும்புகிறார்கள்.. உலகியல் குருமார்களில் பலரும் அதே தவறை செய்து ஜீவ சமாதி என்ற நல்ல பெயரோடு, உள்ளே எல்லோரையும் போல மரண குழியில் அழுகி விடுகிறார்கள்.. 
பிரபஞ்ச பேராற்றலிருந்து பிறக்கும் மனிதன்,விதிக்கப் பட்ட சக்தியோடே பிறக்கிறான்.. அந்த சக்தியோடு அதிகமாக்கப் பட்ட சக்தி நிலை அடையவே இறைவன் மனிதனுள் புத்தி என்ற ஒன்றை படைத்து,அதிலிருந்து விலகாத நித்திய அனுபவமாக கொண்டு விளங்கும் அறிவு ஒன்றை படைத்து உள்ளான்.. புத்தியில் பெற்றதை அறிவு இன்மையால் இழக்கின்றான்.. விதிக்கப்பட்ட சக்தியோடு அதிகப் பட்ட சக்தியை சேர்க்கும் உளவும் பெற்று இருந்தாலும் புத்தியின்மையால் விதிக்கப் பட்ட சக்தியையே இழந்து, பூஜ்ய சக்தி நிலையான மரண நிலைக்கு போகிறான்.. மீளும் வழி அறியாது தவிக்கிறான்.. அந்த தவிப்பே மேலும் அவன் விதிக்கப்பட்ட சக்தியை இழக்க செய்கிறது.. காலில் உள்ள சேற்றை கழுவ விளக்கெண்ணெய்யை உபயோகப்படுத்துவதை போலவும்,நெருப்பை அணைக்க,மண்ணெண்ணெய்யை உபயோகப் படுத்துவதை போல் இருக்கிறது.. ஜென்ம ஜென்மாக நம் வம்சா வழியினர் செய்த பெரும் தவறே பழம் பெருமை என எண்ணும் மனித இனத்தை என்ன வென்று சொல்வது..
விவேகானந்தர்,வள்ளலார் போன்றவர்களின் பழம் பெருமை என கருதப்படும் பழம் பெரும் தவறுகளை சுட்டி காட்டிய வீர முழக்கங்கள் இன்று செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகி விட்டது.. ஒவ்வொரு மதமும் தனது பெரும் தவறுகளை நியாய படுத்த போராடி பிறரையும் அழித்து தன்னையும் அழிக்கும் தவறு ஒன்றையே செய்து கொண்டு இருக்கிறார்கள்.. ஜீவ சமாதி என்ற மரண குழி பழம் பெருமையை விட்டு விலகி அருள் நிலையில் உட்புகுந்து அதிகப்பட்ட சக்தி நிலை அடைந்து,மத நாடு என்ற எல்லைகளை கடந்து அன்பு மயமாய் பிரகாசிக்கும் நிறைநிலை மனித நிலைக்கு வர தனித்த தன் நிலைக்கு வர உதவும் சுத்த வீரமே ஆன்மீகத்தின் முதல் தகுதி.. இந்த யோகத்தை கற்றுக் கொண்டால் இப்படி ஆவேன அப்படி ஆவேன என தனித்த தன் நிலை விட்டு எண்ணங்களின் கூட்டு நிலைக்கு வந்தால் அந்த கூட்டு நிலை கூட்டாளிகளுக்கு நீங்கள் எவ்வளவு சக்தியை பெருக்கிக் கொண்டாலும் அந்த உடன் கூட்டாளிகளுக்கு உங்கள் சக்தியை பகிர்ந்து அளித்தே ஆக வேண்டும்.. சொல்லப் போனால் அவர்கள் கூட்டாளிகள் அல்ல.. பங்காளிகள்.. அது தான் மிக பெரிய உண்மை.. எல்லா ஆசைகளும் அதில் மட்டுமே தோன்றும் எண்ணங்களும், உங்கள் சக்தியை பகிர்ந்து கொள்ளும் உடன் பிறவா பங்காளிகளே.. தெருவில் சும்மா போகிறவர்களை எல்லாம் அழைத்து சட்ட பூர்வமாக சகோதரனாகவும், பங்காளிகளாகவும் அங்கிகாரம் கொடுத்தது மட்டும் அல்லாமல் சொத்து என்ற நம் சக்தியை அவர்களுக்கு போகத்தான் நமக்கு என முன் உரிமையும் வழங்கி விட்டோம்.. பாவம்.. யார் ?.. நாம்தான்.. இதில் என்ன சந்தேகம்.. இதில் மிக பெரிய கொடுமை என்ன வென்றால் அராஜகவாதிகள் தீவிர வாதிகள் தான் எண்ணிக்கையில் அதிகமான பங்காளிகளாக உள்ளனர்.. இந்த உலகியல் சட்ட பூர்வமாக இந்த பங்காளிகளை நீக்க வழியே இல்லை.. பிரபஞ்ச சட்டத்தில் மாத்திரமே இடம் உண்டு.. ஓர் இரகசியம் எதுவெனில் பிர பஞ்ச சட்டத்தின் மூலம் அனைத்து பங்காளிகளை நீக்கி விட்ட நிலையில் தனித்த நிலையில் ஏக போக உரிமையாளராக விதிக்கப் பட்ட மொத்த சக்தியையும்( சொத்துக்களையும் ) அனுபவிக்கும் உரிமை பெறுகிறோம்.. அப்படி ஏக போக உரிமையாளராக ஒருவரை யேனும் இந்த உலகம் காண வில்லை என்பது வேதனையானது,, விதிப்பட்ட சக்தியில் ஒரளவு பெற்றவர்களே உலகில் சில அற்புதங்களை ஆற்றி சென்று இருக்கிறார்கள்.. விதிக்கப்பட்ட சக்தியை பூரணமாக ஒருவர் பெற்றிருந்தால் கூட இந்த உலக தோற்றமே அன்பு மயமாய் மாறி இருக்கும்.. நாத, திருவடி அடுத்த நிலையில் உள்ள வாசி பயிற்சியில் விதிக்கப் பட்ட சக்தி மட்டும் அல்லாது அதிகப் பட்ட சக்தியையும் பெறும் வல்லமை தருவதால், சுத்த வீரம் தரும் தனித்த நிலைக்கு தயாராக ஆயத்த பட வேண்டும்.. தனித்த நிலை என்றால் எல்லாம் துறந்த நிலையென தவறாக எண்ணக்கூடாது..அது துறந்த நிலை அன்று.. சற்று விலகிய நிலையே.. சுருக்கமாக பற்று அற்ற பற்று எனலாம்.. தன்னை காத்து பிறரையும் காக்கும் வல்லமை பெறுவதே புத்தி என்பது ஆகும்.. தன்னை இழந்து பிறரை காக்கும் வல்லமை இழந்து நிற்பது, பெரிய மடமை,புத்தியின்மை.. தன் மேல் தனக்கு உள்ள பற்று சுயநலம் என தவறாக இகழ்ந்து விட்டனர்.. அதன் உண்மை பெயர் தகுதி பெருக்கம்.. தகுதி பெருக்கம் உள்ளவர்கள் மட்டுமே பிறருக்கு உதவ முடியும்.. இல்லாதவர்கள் பிறரின் உதவியை நாடும் அவல நிலையில் இருப்பர்.. வாசியில் மேலும் புகும் முன் சில தகுதிகள் தேவை என்பதற்காகவே இந்த பகுதி..

1 comment: