Saturday 27 June 2015

நாதத்தை பற்றிய ஒன்றுக்கான பதில்


ஆதி என்ற சொல் மிக பழந் தமிழ் சொல். இந்த சொல்லை பல மொழிகள் பல கலாச்சாரங்கள் தத்து எடுத்துக் கொண்டன.. ஆதியோடு பொருந்திய சக்தியை ஆதம் என ஆகும்.. பிள்ளி, சூனியம்,ஏவள் என கேள்வி பட்டிருக்கலாம்.. மூன்றும் ஒரே அர்த்தத்தை குறிக்கும்.. இதில் ஏவள் என்ற சொல் மிக மிக பழந்தமிழ்.. மற்றவை வேறு மொழி சொற்கள்..ஏவள் ஆதம் சக்தியை செயல் நிலைக்கு கொண்டு வரும் ஒரு இயக்க சக்தி.. ஆதாம் ஏவாள் என ஆதியிலே இருந்ததாக கிருஸ்துவ மதம் கூறியது நம் பழந்தமிழின் பண்பாட்டை தத்து எடுத்து கொண்டவையே.. சற்று ஆராய்ந்தால் சில முரண்பாடுகளை நீக்கி விட்டால் மொத்த கிருஸ்துவ மதமே நம் தமிழ் பண்பாட்டின் தழுவலோ என எண்ண தோன்றும்.. ஆகம் ஆதம் என்ற இரண்டு சொற்களில் மிக பெரிய வித்தியாசம் உள்ளது.. ஆகம விதியில் உள்ள ஆகம் என்பதில் 'க்' வும் ஆதம் என்பதில் உள்ள 'த'வும் மிக பெரிய வித்தியாசத்தை தருகிறது.. கடவுளை குறிக்கும் 'க்' என்ற எழுத்தில் மூன்று வட்டங்கள் இருக்கும்.. அந்த மூன்றும் கண்களுக்கு புலனாகாது கடவுளை போல.. அதில் ஒரு வட்டம் திறந்து செயல் பாட்டிற்கு வந்து கண்களுக்கு புலனாகும் படியாக இந்த பூமி சூரியன்,கோள்கள் வந்தன. அதுவே 'த்' ஆனது.. அதில் ஒரு வட்டம் திறந்து இருப்பதை கவனிக்க.. ஆகம் என்ற கடவுள் சக்தி இயக்க சக்தியாக வெளிபட்ட ஒன்றுதான் ஆதம்.. இந்த 'ந்' என்ற எழுத்து நடு நின்ற நிலையை குறிக்கும்... மையம் எனவும் சொல்லலாம்.. எல்லாவற்றுக்கும் நடு நின்ற மையமான தோற்றத்திற்கு வந்த இயக்க சக்திதான் இந்த நாதம் (ந்+ஆதம்= நாதம்).. தலை நடு பகுதியிலே இறைவன் வைத்தது நாதம் என்ற உணர்வாய் தோற்றத்துக்கு வந்த அவனின் இயக்க சக்திதான்.. ம்ம் அடுத்து நாம் செய்ய வேண்டியது நாதத்தை மறுப்பதும்,மறப்பதும்.. அவ்வளவுதானே ???

No comments:

Post a Comment