Saturday 27 June 2015

பகுதி 17 - சிவ கலப்பு சிவ யோகத்தில் பேரறிவு என்ற ஆகாயத்தின் பேராற்றல்

பெரும்பாலும் அறிவை பற்றி மிக தவறாக புரிந்து உள்ளனர்.. பலவற்றை கற்று சித்த பதிவகத்தில் ஏற்றி எண்ண பாரங்களை சுமப்பவர்களையும் வரட்டு கேள்விகளுக்கு சட்டென்று பதில் கூறுபவர்களையும், அறிவாளிகள் என கருதப்படுகின்றனர்... அப்படி பட்டவர்கள் செயல் என்று வரும் போது பின் தங்கி இருந்து முன் இருப்போரை குறை சொல்லி வாய் சொல்லில் வீரர்களாக இருப்பர்.. ஏதோ ஒரு நிலையில் ஆபத்து என்று வந்து விட்டால் படித்த மேதாவிகள் காணாமல் போய் விடுவார்கள்.. காரணம் எண்ண குவியலிலே சிக்குண்டு சித்தம் கலங்கி செய்வது இன்னதென்று அறியாது திகைத்து நிற்பர்.. பண்டித்துவம் பெற்று மணி கணக்கில் காலாட்சேபம் 
செய்வதை அறிவுதனம் என கருதப்படுகிறது.. ஆனால் அதற்கு மாறாக புத்திசாலித்தனம் என்று ஒன்று இருக்கிறது.. 
நொடியில் செயலாற்றி ஆபத்தில் இருந்து விடுவித்து கொள்ளும் அந்த ஆற்றலே அறிவு எனப்படும்.. தன்னுள் இயங்கும் அருள் சக்தியை நொடியில் எழ செய்து அதை எங்கும் முறையாக இயக்கும் வல்லமை உடையவனே அறிவுடையவன் ஆவான்.. கற்ற பெரும் கல்வியை சுமந்து அதை செயல்வடிவிற்கு கொண்டு வாராதவன் அறிவு உடையவன் ஆகமாட்டான்.. அறிவு பிரிந்தால் அ+ரி+ரி+வ்+உ என கொள்ளும்.. 'அ' என்பது பிரபஞ்ச ஆற்றலையும், 'ரி' என்பது எழுந்த தேக இயக்கத்தையும் 'வ்' என்பது வாழ்வியலையும் 'உ' என்பது புத்தி இயக்கத்தையும் குறிக்கும்.. அதாவது அறிவு என்பது அருள் ஆற்றல் எழுந்து எழுந்து ( ரி+ரி தொடர்ச்சியை குறிக்க இணைந்து 'றி' ஆனது ) வாழ்வியல் இயக்கமானது.. நித்திய ஆகாய தூண்டல் என்ற அருள் என்ற சக்தி மையம் தொடர்ந்து, தொடர்ந்து, வாழ்வியல் இயக்கமாவதே அறிவு எனப்படுகிறது.. நித்தியமான அது ஒரு நாளும் ஒரு நொடி கூட முடங்கி கிடப்பது இல்லை.. அது செடி கொடி முதல் எல்லா உயிர்களுக்கும் வாழ்வியல் இயக்கமாக சதா காலமும் உள்ளது.. அந்த அருள் ஆற்றல் தூண்டல் மைய தொடர்பு துண்டிக்கப் பட்டால், மற்ற நான்கு செயல் பூதங்கள் செயல் இழக்கும்.. அந்த 
அறிவின் தொடர்பை பலப்படுத்துவதும்,துண்டிக்கப்படாமல் இருக்கவே, ஒலி ஒளி பயிற்சிகளான நாத திருவடி பயிற்சிகள்.. நொடிக்கு நொடி தூண்டும் அறிவின் இணைப்பவை எந்த ஒரு நொடியும் இழக்காமல் இருக்கிறான் நிறை நிலை மனிதன்.. நாத பயிற்சி செய்யும் போது மிக கவனிக்க வேண்டிய ஒன்று,.. ஒருவர், தான், ஒவ்வொரு நொடியும் நாதத்தை விட்டு விலக துடிப்பதே.. அதற்கு காரணம் எண்ண ஆதிக்க இழுப்பே.. அறிவின் இயல்பான விழிப்போடு நாதத்தோடு பொருந்த பொருந்த ஒருவன் அறிவோடு பொருந்தி இருக்கும் வல்லமை பெறுகிறான்.. அதனால் ஒட்டு மொத்த பஞ்ச பூதங்கள் வலிமை பெறுகின்றன.. அறிவுடன் சேர்ந்த இணைப்பே விழிப்பு ஆற்றல்.. விழிப்பு ஆற்றல் அதாவது அறிவு ஆற்றலில் செய்யும் எதுவும் அறிவின் ஒழுங்கு தன்மை பிரதிபலிப்பால் எல்லாம் ஒழுங்காகவே நடைபெறும்.. அதனால் அறிவு தொடர்பான விழிப்பு நிலைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.. விழிப்பு ஆற்றல் பெருக பெருக அது பேரறிவு ஆகிறது.. நிறை நிலை மனிதன் பேரறிவின் வடிவமே ஆனவன்.. எதையும் நொடிபொழுதில் பஞ்ச பூதங்களை ஒன்று திரட்டி முழு ஆற்றலோடு செயல்படுத்தக்கூடியவன்.. ஒரு அதிகம் படித்த பண்டிதனை போல் ஆபத்தில் முடங்கி, செயல் இழக்காமல், செயல் வடிவமாய் உள்ளவன்.. உலகில் இத்தனை கொடுமைகள் நடந்தும் இறைவன் ஏன் செயலுக்கு உடனே வர முடியவில்லை ?..அவன் பண்டிதனா ? எண்ண குவியலிலே சிக்குண்டு பித்தம் தலைக்கு ஏறி சித்தம் கலங்கி இப்படி இருக்கின்றானா ? என்ற பல கேள்விகள் எழ தொடங்கி விட்டன.. கொடுமைகளை எதிர் கொள்ள, துரித விரைவு கொள்ள, விழிப்பு ஆற்றலின் மித மிஞ்சிய பெருக்கம் தேவை படுகிறது.. அதற்கு ஒலி ஒளி பயிற்சியில் மிகுந்த தீவிரம் தேவை என்பது சிவகலப்பு சிவ யோகத்தில் வெளிப்படுகிறது..

No comments:

Post a Comment